×

5 மாத இடைவெளிக்கு பிறகு ஜிம், யோகா மையம் இன்று முதல் திறப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறக்கப்பிட்டதால், ஜிம்கள், யோகா மையங்கள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதற்கிடையே, கடந்த 30ம் தேதி 7ம் கட்ட ஊரடங்கு தளர்வில், இவை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படலாம் என தளர்வு அறிவித்த மத்திய அரசு, அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, ஜிம்கள், யோகா மையங்கள் மீண்டும் செயல்படுவதற்காக முழு வீச்சில் தயாராகி விட்டன. மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு நுழைவு வாயிலில் சானிடைசர், உடல் வெப்பநிலையை அறிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, உடற்பயிற்சிகளை தொடங்கும் முன் ஆக்சிஜன் அளவை சோதித்தல் ஆகியவற்றுடன் இன்று முதல் செயல்பட தொடங்குகின்றன.

முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜிம், யோகா மையங்களில் பயிற்சியாளர், பயிற்சி பெறுபவர்களுக்கு இடையே 4 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் உடற்பயிற்சி கருவிகள், உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று அதிகமாக உள்ள தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவற்றை திறக்க அனுமதி அளிக்கப்
படவில்லை.

* பாதிப்பு 19 லட்சத்தை  தாண்டியது
நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 52,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் குணமாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தொற்று காரணமாக 803 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த பலி எண்ணிக்கை 38,938 ஆக உயர்ந்துள்ளது. குணமடைபவர்கள் விகிதம் 66.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 2.10 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்றிரவு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது.

Tags : Gym ,yoga center ,hiatus , 5 month break, gym, yoga center, starting today, opening
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்