×

உச்ச நீதிமன்றம் உத்தரவு முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிபிஇ, மாஸ்க் தர வேண்டும்

புதுடெல்லி: கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் தனியாக வசிக்கும் ஏராளமான முதியவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களும் நோய் தடுப்பு உபகரணங்கள் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே, முதியோர் இல்லங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், வக்கீலுமான அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, ‘‘முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கு பிபிஇ கிட், மாஸ்க் உள்ளிட்டவற்றை உள்ளாட்சி நிர்வாகங்கள் முறையாக வழங்க வேண்டும். முதியவர்களுக்கு எந்த நேரத்திலும் தேவைப்படும் உதவிகளை செய்து தர உள்ளூர் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு உரிய நேரத்தில் பென்சன் தொகை கிடைப்பதையும் மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்,’ என உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,nursing home , Supreme Court, Retirement Home, For Those Who Have, BPE, Mask Quality
× RELATED பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல்...