×

இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் புதிய ஆயுதம்: விதை தீவிரவாதம்...

புதுடெல்லி: கொரோனா வைரசை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய ஆயுதத்தை சீனா கையில் எடுத்துள்ளது. அதுதான், ‘விதை தீவிரவாதம்.’ இதனால், விவசாயத்துக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை, பல லட்சம் பேர் பலியாகி விட்டனர். அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்து விட்டது. பொருளாதார இழப்புகளில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வர, 2 முதல் 5 ஆண்டுகள் வரையாகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், உலகத்தை அச்சுறுத்தக் கூடிய புதிய கொடூர ஆயுதம், சீனாவில் இருந்து கிளம்பி இருக்கிறது. இதை உலக அமைப்புகள், ‘விதை தீவிரவாதம்’ என்றே அழைக்கின்றன. விவசாயத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் நோக்கத்தில், ‘பார்சல்கள்’ மூலமாக இந்த தீவிரவாதத்தை சீனா பரப்பத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் என சீனாவுக்கு வேண்டாத நாடுகளில் உள்ள மக்களுக்கு, சமீப காலமாக அவர்களின் வீட்டை தேடி மர்மமான முறையில் விதை பார்சல்கள் வருகின்றன. தாங்கள் ஆர்டர் செய்யாமல் இவை எப்படி வருகின்றன என அவர்கள் குழம்பிப் போயுள்ளனர். இது பற்றி அந்த நாட்டு புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கி இருக்கின்றன.

ஆனால், புதிதாக கிளம்பி இருக்கும் இந்த விதை தீவிரவாதத்தால் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு மிகப்பெரிய சேதத்ைத ஏற்படுத்தும் என்று, ‘சர்வதேச விதை பரிசோதனை அமைப்பு,’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள யாருக்கும் இதுவரை, இதுபோன்ற விதை பார்சல்கள் வரவில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி இந்த அமைப்பின் துணைத் தலைவரான கேசுவலு கூறுகையில், ‘‘ஒபார்சலில் வரும் இந்த விதைகள், விஷத்தன்மை உடையதாக இருக்கலாம். இவற்றை பயன்படுத்தினால், எதிர்காலத்தில் விவசாயத்தை வேரறுத்து விடும் அபாயம் உள்ளது.

உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கும். மக்களுக்கு நோய்களை ஏற்படுத்தும், எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய வகையில், சுற்றுச்சூழல் பிரச்னைகள் உருவாகும். இந்த விதைகள் எந்தளவுக்கு ஆபத்தானவை என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் அது பற்றிய ஆய்வுகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த விதைகள் சீனாவில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆனால், அந்நாட்டு வெளியுறவுத் துறை இதை மறுத்துள்ளது,’’ என்றார். இவர், தெலங்கானா மாநில விதைகள் மற்றும் ஆர்கானிக் சான்றிதழ் ஆணையத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார்.

* விவசாயத்தை வேரறுக்கும்
1 பார்சலில் வரும் சீன விதைகள், விஷத்தன்மை உடையதாக இருக்கலாம்.
2  இவற்றை பயன்படுத்தினால், எதிர்காலத்தில் விவசாயத்தை வேரறுத்து விடும் அபாயம் உள்ளது.
3  உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கும். மக்களுக்கு நோய்களை ஏற்படுத்தும்.
4 எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய வகையில், சுற்றுச்சூழல் பிரச்னைகள் உருவாகும்.
5 பார்சல்களில் அனுப்பப்படும் விதைகள், பெரும்பாலும் காலையில் மலரும் பூக்களின் செடி விதைகளாகவே இருக்கின்றன.
6  செம்பருத்தி பூ, காட்டு ரோஜா, ஜப்பான் ரக பூ போன்றவைகளின் விதைகள் இதில் உள்ளன.

விதைகள் தலைநகரம் தெலங்கானா
* இந்தியாவின் விதைகள் தலைநகரமாக தெலங்கானா மாநிலம் விளங்குகிறது.
* ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு ஆண்டுதோறும் விதைகளை ஏற்றுமதி செய்கிறது.
* மேலும், இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களுக்கும் விதைகளை சப்ளை செய்கிறது.
* நாட்டின் 60 சதவீத விதை தேவையை இந்த மாநிலம்தான் பூர்த்தி செய்கிறது.

* துறைமுகம், ஏர்போர்ட்களில் கண்காணிக்க வேண்டும்
கேசவலு மேலும் கூறுகையில், ‘‘இந்த விதைகளின் வருகையை தடுப்பதற்காக இந்தியா தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும். துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலை மார்க்கங்கள் என, சரக்கு போக்குவரத்து நடைபெறும் அனைத்து மார்க்கங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். பார்சலில் வரும் சரக்குகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்,’’ என்றார்.

* அமெரிக்காவில் குவியும் மர்ம பார்சல்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்தான் முதன் முதலில் இந்த வகை விதை பார்சல்கள் வரத் துவங்கின. சம்மந்தமே இல்லாமல் தங்களுக்கு வந்த விதைகள் வித்தியாசமாக இருப்பதை மக்கள் உணர்ந்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் கண்காணிக்க துவங்கினர். விதைகள் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் கருதுவதால் சீனாவில் இருந்து வரும் பார்சல்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு விதைகள், சில வகை நட்ஸ்கள் வருவதுண்டு.

அவற்றை மக்கள் பார்சலில் தருவிப்பார்கள். ஆனால், கொரோனா ஆபத்துக்கு பின்னர், சீனா என்றாலே அலறுகின்றனர். பல மாநிலங்களிலும் சீன பார்சல்களை தருவிப்பதை நிறுத்தி விட்டனர். இதை யார் அனுப்பி வைக்கின்றனர் என்று தெரியவில்லை என்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். புளோரிடா உட்பட பல மாநிலங்களில் இப்படி சீன மொழி எழுத்துகளில் பார்சல்கள் வருகின்றன. இந்த பார்சல் வந்தவுடனே அதிகாரிகளுக்கு தகவல் தரச்சொல்லி, அவற்றை சோதிக்க ஆரம்பித்துள்ளனர்.

* கோஸ், புதினாவிலும் வைரஸ்?
சீனாவில் இருந்துதான் பெரும்பாலும் அமெரிக்காவில் விதைகளை வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர். கோஸ், புதினா போன்ற செடிகளுக்கான விதைகள் மூலம்தான் வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இப்படி பார்சலில் வரும் 12 வகையான விதைகள்தான் அதிகாரிகளுக்கு சந்தேகத்ைத ஏற்படுத்தி வருகிறது. அவற்றை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

Tags : China ,India , China threatens India, new weapon, seed extremism ...
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...