சென்னையில் டெங்கு தடுப்பு பணி தீவிரம் கொசு உற்பத்தியாகும் இட உரிமையாளருக்கு அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 88 ஆயிரத்து 826 பேர் குணமடைந்துள்ளனர். 2176 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி கொசுக்கள் வளராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொசு உற்பத்தியாகும் இடங்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிவிரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. களப்பணிகளை தவிர்த்து, பொதுமக்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் ஒத்துழைப்பு டெங்கு தடுப்பு பணியில் முக்கியமானது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியில் களப்பணியில் உள்ள குழுக்கள் இதை முழுமையாக செயல்படுத்தும், என்றார்.

Related Stories: