100சதவீத கட்டணம் கேட்கும் பள்ளிகள் எவை? மெட்ரிக் இயக்ககம் கேள்வி

சென்னை: தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிக்கை:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகள் நிலுவையில் உள்ள 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்று கேட்டு பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் மூலம் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையை எதிர்த்து சில தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன்மீது நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது.

இதை மீறி ஒருசில பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புத்துவதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளதால், 10ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குநர் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 100 கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் அந்த பள்ளிகள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுத்த நடவடிக்கைகள்  குறித்த பட்டியல்களை 10ம் தேதிக்குள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Related Stories: