திருச்சி அருகே மணல் திருட்டை தடுத்த எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த பெருவளப்பூர் - ரெட்டிமாங்குடிக்கு இடையேுள்ள சந்திரமுகி ஓடையில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரெட்டிமாங்குடி கவுண்டர் தெருவை சேர்ந்த ராமராஜன்(20), கீழத்தெருவை சேர்ந்த குணா(19), ரெட்டியார் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன்(250 ஆகிய 3 பேர் நேற்றிரவும் இன்னும் 2 பேருடன் சேர்ந்து சந்திரமுகி ஓடையில் பொக்லைன், டிப்பா–்லாரி, டிராக்டர் கொண்டு மணல் திருடிக்கொண்டிருந்தனர். தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிறுகனூர் எஸ்.ஐ. செந்தில்வேலனை பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் பொக்லைன், டிப்பர் லாரியை எடுத்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

ராமராஜன், குணா, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் மணல் திருட்டை தடுத்த எஸ்.ஐ. செந்தில்வேலன் மீது மணல் டிராக்டரை ஏற்றினர். இதில் செந்தில்வேலன் கை, கால் முறிந்தன. காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுகனூர் போலீசார் வழக்கு பதிந்து மணல் டிராக்டரை பறிமுதல் செய்து, ராமராஜன், குணா, ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>