×

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என வரிசையாக பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கும் கடந்த வாரம் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவமனையில் தான் அமித்ஷாவும் சிகிச்சை பெற்று வருகிறார்.Tags : Dharmendra Pradhan ,Corona , Corona, Dharmendra Pradhan
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி