×

பொது சேவையில் ஒரு திருப்திகரமான வாழ்க்கை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது சேவையில் ஒரு உற்சாகமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது எனவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படு கிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பாக செயல்படுகிறது. தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை பணி நியமனம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்பட 829 இடங்களுக்கு  சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல்  நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டது.  

இந்நிலையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சிவில் சர்வீசஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பொது சேவையின் உற்சாகமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது. அதற்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும், அதேநேரத்தில் தேர்வில், விரும்பிய முடிவைப் பெறாத இளைஞர்களுக்கு, நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை பல வாய்ப்புகள் நிறைந்தது. நீங்கள் ஒவ்வொருவரும் கடின உழைப்பாளி மற்றும் விடாமுயற்சி உடையவர்கள். உங்கள் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags : Winners ,UPSC Civil Service Examination ,UPSC , Public Service, UPSC Civil Service, Prime Minister Modi, Greetings
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...