×

கொரோனா தொற்று ஊரடங்கில் ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி திட்டத்தில் இ-வே பில் அதிகரிப்பு

டெல்லி: கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு வலுவான சாட்சியாக ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை அமலில் உள்ள நிலையில், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்க துவங்கியுள்ளன. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் பதிவு செய்த வணிக நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு அனுப்பும், ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்கிற்கு, இ-வே பில் அவசியமாகும். சரக்கு கொண்டு செல்லும் போது வரி அதிகாரிகள் ஆய்வு செய்தால் இந்த பில் அவசியமாகும்.

ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தை விட அதிகமாகியுள்ளது. ஜூனில் இ-வே பில்களின் எண்ணிக்கை 4.34 கோடியாக இருந்தது. ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 லட்சம் இ-வே பில்கள் பதிவாகியுள்ளது.Tags : GST ,Corona , Corona, GST, e-Way Bill
× RELATED செப்டம்பர்-19: பெட்ரோல் விலை ரூ.84.21, டீசல் விலை ரூ.77.21