×

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தங்களது காப்புரிமையை மீறி விட்டதாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனமான ஷியாவோ-ஐ (xiao-i) இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. ரூ.10,800 கோடி இழப்பீடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. உற்பத்தி, பயன்பாடு, விற்பனை மற்றும் இறக்குமதி தொடர்பாக தங்களுக்கு இருக்கும் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் போன்களில் பயன்படும் குரல் அங்கீகார தொழில்நுட்பமான சிரிக்கு கடந்த 2009ல் தங்களுக்கு காப்புரிமை கிடைத்துள்ளதாகவும் ஷியாவோ-ஐ தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக கடந்த 2012ல் முதன்முதலாக ஷியாவோ-ஐ இழப்பீட்டு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தைவானின் உள்ளூர் மின்னணு நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு போட்டியாளர்களால் கொண்டுவரப்பட்ட அறிவுசார் சொத்து தகராறுகளுக்கு எதிராக போராட உதவும் ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக, தைவானிய பல்கலைக்கழகம் ஆப்பிள் நிறுவனம் தனது சிரி குரல் உதவியாளரின் காப்புரிமை மீறல் குற்றச்சாட்டில் வழக்குத் தொடுத்துள்ளது. ஆப்பிள் எச்.டி.சி மீது சட்ட நடவடிக்கை எடுத்தது, சமீபத்தில் காப்புரிமை போர்கள் காரணமாக அமெரிக்காவிற்கு அதன் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தாமதமானது.



Tags : company ,Chinese ,Apple ,Xiao-i ,Artificial Intelligence , Artificial Intelligence, Xiao-i, Apple
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...