கேரளாவில் பருவமழை தீவிரம் மங்கலம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பாலக்காடு:கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனால் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.சுள்ளியாறு அணையின் மொத்த கொள்ளளவு 154.04 மீட்டராகும் நேற்றைய நிலவரப்படி 142.97 மீட்டர் நீர்மட்டம் உள்ளது. காஞ்ஞிரப்புழா அணையின் கொள்ளளவு 97.53 மீட்டர், தற்போது 92.66 எட்டியுள்ளது. மலம்புழா அணையின் கொள்ளளவு 115.06 மீட்டர், தற்போது 105.93 மீட்டர் அடைந்துள்ளது. மங்கலம் அணையின் கொள்ளளவு 77.88 மீட்டராகும், தற்போது 76.62 மீட்டரை எட்டியதைத் தொடர்ந்து அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனால் மங்கலம் நதி கரையோரங்களில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்வளப்பாசத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீன்கரையின் அணையின் கொள்ளளவு 156.36 மீட்டர், நேற்றைய நிலவரப்படி 153.01 மீட்டரை எட்டியுள்ளது. போத்துண்டி அணையின் கொள்ளளவு 108.20 மீட்டர், தற்போது 97.54 மீட்டர் தண்ணீர் நிரம்பியுள்ளது. வாளையார் அணையின் கொள்ளளவு 203 மீட்டர் தற்போது 196.65 மீட்டர் எட்டியுள்ளது. காஞ்ஞிரப்புழா அணையிலிருந்து உபரிநீர் எந்நேரத்திலும் திறந்துவிடப்படவுள்ளதாக நீர்வளபாசனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: