கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பழம், பூ கடைகளை அடைத்து போராட்டம் : வணிகர் சங்கம் அறிவிப்பு!!

சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி, ஆகஸ்ட் 10-ம் தேதி அனைத்து காய்கறி, பழம் மற்றும் பூச்சந்தைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை புரசைவாக்கத்தில் நடந்த வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முழு அடைப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டிருக்கும் காய்கறி சந்தைகளை திறக்கக் கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி திங்கள்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து காய்கறி, பழம் மற்றும் பூச் சந்தைகள் மூடப்படும். தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரும் வகையில் இந்த அடையாள ஒரு நாள் போராட்டம் நடத்தப்படும். அப்போதும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் வணிகர்கள் தொடர் போராட்டம் நடத்துவர்.

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கும்பட்சத்தில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட திருமழிசை சந்தையில் போதுமான வசதிகள் இல்லாததால் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகின்றன. மழை காரணமாக திருமழிசை சந்தையில் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மூடப்பட்ட கோயம்பேடு சந்தை மற்றும் மாவட்டங்களில் உள்ள சந்தைகளையும் திறக்காய்கறி, பூ மற்றும் பழச் சந்தைகள் மூடப்படும், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: