டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது...: சீன அரசு ஊடகத்தில் செய்தி வெளியீடு

பெய்ஜிங்: டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது என சீன அரசு ஊடகமான சீனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்யப்போவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால், இந்த முடிவை திடீரென மாற்றிய அவர், மைக்ரோசாப்டிடம் டிக்டாக்கை விற்க, டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்சுக்கு 45 நாள் கெடு விதித்துள்ளார். இதன்படி வரும் செப்டம்பர் 15க்குள் விற்பனை முடிய வேண்டும். மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், டிக்டாக் உரிமத்தை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாங்க உள்ளதாக சத்ய நாதெள்ளா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், டிரம்பின் இந்த் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன அரசு நாளிதழான சீனா டெய்லியில், டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுய முக்கியத்துவ  கொள்கையின் விளைவாகவே சீன நிறுவனங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் சொல்ல சீனாவிடம் ஏராளமான வழிகள் இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>