×

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு..அதில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் இப்போது வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பும் வெளியானது. இப்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன் லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கிரேடு முறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கிரேட முறையில் வழங்கப்படும் என கூறப்படுவது தவறு. வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை, அதுவே தொடரும். ஐடெக் லெப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்.

Tags : classes ,examination ,Government of Tamil Nadu ,Senkottayan ,Minister Senkottayan , Minister Senkottayan, 10th class examination, new education policy
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...