×

சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை விரட்ட கோரிக்கை: வாகன ஓட்டிகள் அச்சம்

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரம் சுற்றி திரியும் ஒற்றை யானையால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை, வனப்பகுதியை விட்டு வெளியேறி அஞ்செட்டி சாலையில் சுற்றித்திரிந்து வருகிறது. நேற்று முன்தினம், சாலையோரத்தில் நின்றிருந்த யானையை கண்டு, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், சாலையில் நின்றிருந்த ஒற்றை யானையை மரகட்டா காப்பு காட்டிற்குள் விரட்டினர். இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். யானை சாலையை கடந்து சென்றபோது, பொதுமக்கள் சிலர் யானையுடன் செல்பி எடுத்தனர். இது ஆபத்தானது என்பதால், யானையுடன் செல்பி மற்றும் போட்டோ எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வாகனங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,road , Elephant, motorists, Dhenkanikottai
× RELATED சேறும், சகதியுமான மஞ்சனக்கொரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை