×

நீலகிரியில் கனமழை வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி...!!! வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!!!

நீலகிரி:  நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் பலர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணியானது தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பலத்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடலூரில் கடந்த 2 தினங்களாக கனமழையானது வெளுத்து வாங்குகிறது.

அதாவது நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு 201மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள காலம்புழா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பழங்குடியினர் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் மின்சாரமானது துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேரை மீட்டனர்.

மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள 15 பேரை மீட்கும் பணியானது தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த 25 பேரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த மீட்பு பணியானது காலை 5 மணி முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : floods ,Nilgiris ,flood victims , heavy rains ,floods ,Nilgiris , flood victims,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...