×

தமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி

சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விகிதத்தை விட  உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரலில் 43.8% ஆகவும், மே மாதத்தில் 33%ஆகவும், ஜூன் மாதத்தில் 13.1% ஆகவும் வேலைவாய்ப்பின்மை பதிவாகி இருந்தது. என்றாலும் தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7% ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஜூலை மாத விகிதம் 8.1% ஆக பதிவாகி உள்ளது. இந்த விகிதம் தொழில்கள் நிறைந்த மாநிலங்கள் ஆன மராட்டியத்தில் 4.4% ஆகவும் குஜராத்தில் 1.9% ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதற்கு கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது ஒரு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் பொது போக்குவரத்து தொடங்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போது வட மாநில தொழிலாளர்களை கட்டுமான நிறுவனங்கள் விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றன. ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் கட்டுமான நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன. ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய துறைகள் பழைய நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, unemployment, rate, increase, national average, shock
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...