×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது!: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு..!!

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து குறைவாகவே காணப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும், கர்நாடக அணையில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது. கடந்த 20 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து  8,000 கனஅடி வரை அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று நிலவரப்படி கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,712 கனஅடியாகவும் அதேபோல் கபினி அணையில் இருந்து 1,500 கனஅடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து இன்றைய நிலவரப்படி தமிழகத்திற்கு 2,712 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. அதேபோல் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகவும் தற்போது நீர் இருப்பு 64 அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,500 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 3,000 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்து வருவதால் ஒகேனக்கல் அணைக்கு வரும் நீரின் அளவும் சரிந்து காணப்படுகிறது.

Tags : Cauvery ,catchment areas ,areas , Low rainfall ,Cauvery , Okenakkal Cauvery river ,water level ,
× RELATED காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்...