×

சில்லி பாய்ண்ட்...

* வயதை குறைத்து காட்டி போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், தாமாக முன்வந்து தவறை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இல்லையேல் 2 ஆண்டு தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* கால்பந்து விளையாட்டில் திறமையான இளம் வீரர்களை கண்டறிவதற்காக 5 மண்டல திறனறி குழுக்களை உருவாக்க உள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
* டென்மார்க்கில் அக். 3-11 வரை நடக்க உள்ள தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பேட்மின்டன் பைனல்ஸ் தொடர்களுக்கான அட்டவணை நேற்று வெளியானது. மகளிருக்கான உபெர் கோப்பையில் இந்திய அணி டி பிரிவில் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி அணிகளின் சவாலை சந்திக்கிறது. ஆண்கள் அணி சி பிரிவில் டென்மார்க், ஜெர்மனி, அல்ஜீரியா அணிகளை எதிர்கொள்ளும்.
* எந்த ஒரு வெளிநாட்டு டி20 தொடரிலும் விளையாடுவதை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என்று ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

Tags : Roulette, Point
× RELATED சில்லி பாயின்ட்...