×

கொரோனாவால் 2 பேர் பலி சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் முன்னிலையில் அடக்கம்

திருமலை: சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த தூக்கிவாக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரின் சடலத்தை அங்குள்ள அரசு நிலத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து சடலத்தை கொண்டு வந்தனர். இதையறிந்த அப்பகுதிமக்கள் இந்த இடத்தின் அருகே விவசாய நிலங்கள் உள்ளது. இதன் மூலம் தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படும் எனக்கூறி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் பரத்குப்தா, திருப்பதி எஸ்பி ரமேஷ், மாநகராட்சி கமிஷனர் கிரிஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் கொரோனாவால் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கூறினர். இருப்பினும் கிராமமக்கள் இதனை ஏற்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் கலெக்டர் முன்னிலையில் 2 சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : protest ,Collector , Corona, 2 killed, body buried, public protest, collector presence, burial
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...