ஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி

ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் சிறைச்சாலை  குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். சிறைக்கு அருகில் உள்ள கட்டங்களில் இருந்து தாக்குதலைத் தொடங்கிய அவர்கள், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றிலும் தற்கொலைப்படை தீவிரவாதிகள் சிறையின் மெயின் கேட்டை நோக்கி வந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர மோதலில் பொதுமக்கள், காவல்துறையினர், கைதிகள் என 29 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சண்டையின் போது, 1,500 சிறைக்கைதிகள் தப்பித்துள்ளனர். அவர்களில் பலர் பிடிபட்டுவிட்டாலும், 1000க்கும் அதிகமான கைதிகள் இன்னும் பிடிபடவில்லை.

Related Stories:

>