×

மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கொள்கை -2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி. மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Chief Minister ,Tamil Nadu , Thanks to the Chief Minister of Tamil Nadu, MK Stalin, for opposing the trilingual project
× RELATED விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு...