×

சமையல் கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சமையல் கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தின்படி, “ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பேருக்கு உணவு” என்ற திட்டத்தின் அடிப்படையில், கடந்த மாதம் 18ம் தேதி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, 69வது வட்டம், சிகாகுளம் பகுதியில் முதற்கட்டமாக, சமையல் கலைஞர்களிடம் ரூ.10 லட்சத்தை வழங்கி துவக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்டமாக ரூ.10 லட்சத்தை, நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சமையல் கலைஞர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வழங்கினார். வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள ஏழை மக்களின் பசியை போக்கும் இத்திட்டத்திற்கான முழு செலவுகளையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வின் போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., பகுதிச் செயலாளர் ஐசிஎப் முரளி, தலைமைக் கழக வழக்கறிஞர் கே.சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : MK Stalin ,chefs , Chef, Rs 10 lakh sponsorship, MK Stalin
× RELATED மு.க.ஸ்டாலினை பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோர் சந்திப்பு