×

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘பொது இடங்களில் எச்சில் துப்பினால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்க எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு புகைபிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் சட்டத்தின் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக அபராதம் விதிக்க முடியும்.

இந்த சட்டத்தின் கீழ் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை ரூ.200 வரையும், மூன்றாவது முறை ரூ.500 வரையும் அபராதம் விதிக்க முடியும். இந்த சட்டத்தின் படி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக அபராதம் விதிக்க முடியும். இதைத் தவிர்த்து தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படியும் அபராதம் விதிக்கலாம். இதைத்தவிர்த்து உள்ளாட்சி அமைப்பு இது தொடர்பான துணை விதிகளை உருவாக்கியுள்ளன. இந்த துணை விதிகளை பின்பற்றியும் அபராதம் விதிக்கலாம்’. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : places ,Health officials , In public places, a fine of up to Rs.500 for spitting, health officials, information
× RELATED முகக்கவசம் அணியாவிடில் அபராதம்...