அதிமுக புதிய மாவட்ட செயலாளர் தலைவர் சிலைகளுக்கு மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி தலைமையால், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் உள்ள பெரியார் சிலை, ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை, அண்ணா நினைவில்லத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது, அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், நகர செயலாளர் ஸ்டாலின் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>