×

உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பு: நூதன முறையில் கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டரை சந்தித்து மக்கள் ராஜ்ஜியம் கட்சியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரி மனு அளித்தனர். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும் சேர்த்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை வரும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட வீரபோயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சியினர் ஆடு, மாடு, கோழி, எருமை ஆகியவற்றின் புகைப்படங்களை பதாகைகளாக ஏந்தி நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். மத்திய கல்வி நிறுவன சட்டம் 2006-ஐ திருத்தி, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடும், மாநிலங்களில் மாநில இட ஒதுக்கீடு விகிதப்படி இடம் வழங்க வேண்டும். மத்திய, மாநில வளர்ச்சி திட்டங்களில் மிகவும் பிற்படுத்தப்ட்டோர் பிரிவுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Collector , Backward Classes, Population, Census, Innovative Method, Petition to Collector
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...