பெரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி செயலாளரை பணியிடம் மாற்ற வேண்டும்: பொதுமக்கள் சரமாரி புகார்

காஞ்சிபுரம்: பெரும்பாக்கம் கிராம பொதுமக்கள் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசனிடம், அவர்கள் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம், ஊராட்சி செயலாளர் தகாத வார்த்தைகளில் பேசுகிறார். ஏற்கனவே 100 நாள் வேலையை 2 பிரிவுகளாக பிரிந்து வேலை செய்தோம். தற்போது 4 பிரிவுகளாக பிரித்து வேலை தரப்படுகிறது. இதில், ஒரு பிரிவுக்கு மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே வேலை தரப்படுகிறது. இதில் ஒரு பிரிவினரில் மட்டும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தராமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

மேலும் கிராமத்தில் நடைபெறும் பள்ளி கட்டிடப் பணிக்கு காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை தண்ணீர் வழங்குவதால், கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால், பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதையொட்டி, பொதுமக்களிடையே மோதல் ஏற்படும் சூழலை ஊராட்சி செயலாளர் உருவாக்குகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: