காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை – தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகம்

ஸ்ரீநகர்: பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக ஜம்மு-காஷ்மீர் சென்ற 162வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த ரைபிள்மேன் ஷாகிர் மன்சூரை நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை. அவரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக எல்லையில் தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு காஷ்மீர் பகுதிக்குள் தேடுதல் வேட்டையிலும் பாதுகாப்புப் படைவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷாகிர் மன்சூரின் கார் எரிந்த நிலையில் குல்கம் மாவட்டத்திலுள்ள ரம்பாமா பகுதியின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதனால் தீவிரவாதிகளால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகித்து தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தேடல் தொடர்கிறது என #TerrorismFreeKashmir என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ராணுவம் ட்வீட் செய்துள்ளது. ஷாகிர் மன்சூருக்கு சொந்தமான எரிந்த கார் குல்கம் மாவட்டத்தின் ரம்பாமா பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: