×

வடக்கு லடாக் எல்லையில் சீன அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக இந்தியா படைகளை குவித்து எல்லையை வலுப்படுத்தி வருவதாக தகவல்..!!

டெல்லி:  வடக்கு லடாக் எல்லையில் சீன அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக இந்தியா படைகளை குவித்து எல்லையை வலுப்படுத்தி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா -- சீனா இடையே, சில மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில், 20 இந்திய வீரர்கள் பலியான நிலையில் சீனா தரப்பில் 35 ராணுவ வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அதிக உயரமான இடத்தில் உள்ள விமானத் தளத்திற்குச் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டதுதான், ஜூன் மாதம் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது. அந்த மோதலில் இந்திய வீரர்கள் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

இரு தரப்பிலும் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாட்டு ராணுவமும், தங்கள் படைகளை, எல்லையில் இருந்து, திரும்ப பெற்று வருகின்றன.

மேலும் எல்லையில், நம் படைகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சீன படைகள் போருக்கு தயாராகி வருவதற்கான அறிகுறி தெரிகிறது. எப்பேர்பட்ட நிலைமையை சமாளிக்கவும், நம் படைகள் தயாராக உள்ள நிலையில், படைகளை திரும்ப பெறும் நடவடிக்கை, இன்னும் முழுமை பெறவில்லை. இந்நிலையில் வடக்கு லடாக் எல்லையில் இந்தியா ஏராளமான பீரங்கிகளையும், ராணுவ தளவாடங்களுடன் கூடிய வீரர்களையும் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : border ,India ,Ladakh ,Chinese , Northern Ladakh border, Chinese threat, Indian forces, information
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது