புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்..!!

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்தார்.

பின்னர் புதுச்சேரி மாநிலத்த்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என கமல்ஹாசன் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய கல்விக்கொள்கை திட்டத்தில் மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>