அமெரிக்காவில் கொரோனாவால் அடுத்த 21 நாட்களில் 20,000 பேர் பலியாக வாய்ப்பு: நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் 21 நாட்களில் மேலும் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கக்கூடும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,54,447 பேர் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வரும் ஆகஸ்டு 22ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டும் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அலபாமா, நியூஜெர்ஸி, கெண்டகி, வாஷிங்டன் போன்ற மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இளைஞர்கள் மூலமாகவே நோய் தொற்று வேகமாக பரவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் கூட்டமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலமாகவே நோய்த்தொற்று வேகமாக பரவுகிறது என்றும் நோய் தடுப்பு மையம் கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டிவிட்டது. எனவே கொரோனா தடுப்பூசி வாங்குவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோபி, கிளாக்சோஸ்மித்கிளைன் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories: