×

அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் பணிக்கான பூமி பூஜைக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் பேட்டி..!!

லக்னோ: அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர்கோவில் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, அத்வானி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழாவில் பங்கேற்க மொத்தம்  200 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். அவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் இருந்து, ராம பக்தர்கள் பலரும் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போதே அங்கு வரத்தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையில், ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தடுக்க பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ பயங்கர வாதிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் எச்சரிக்கைப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, அயோத்தியின் அனைத்து நுழைவாயில்களும் சீல் வைக்கப்பட்டு,  எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அயோத்தியில் புதிய நபர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 6ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Sampath Roy ,Ramarko ,Ayodhya ,Bhoomi Puja ,Foundation , Ayodhya, Ramarkoil, Bhoomi Puja, 175 people, call,
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்