×

இன்றைய வர்த்தக முடிவில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 667 புள்ளிகள், நிஃப்டி 182 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 667.29 புள்ளிகள் சரிந்து 36,939.60 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 181.85 புள்ளிகள் சரிந்து 10,891.60 புள்ளிகளில் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,417 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,232 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 181 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.19 லட்சம் கோடியாக குறைந்தது. இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.22 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் டைட்டன், டாடா ஸ்டீல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது. பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது மற்றும் தினந்தோறும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.Tags : Sensex ,Nifty ,Stock Exchange , Stock Exchange, Sensex, Nifty
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 134...