இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு!: விசாரணைக்காக மும்பை சென்ற பீகார் எஸ்.பி தனிமைப்படுத்தப்பட்டதால் சர்ச்சை!!!

மும்பை: பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை சென்ற பீகார் காவல் கண்காணிப்பாளரை தனிமைப்படுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. பாலிவுட் திரையுலகில் வேகமாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகார் மாநிலத்தை சேர்ந்தவராவார். இதனையடுத்து சுஷாந்த் சிங் மும்பையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி மும்பையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பீகார் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையினர்கள் இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணைக்காக மும்பை சென்ற பீகார் எஸ்.பி வினை திவாரி தனிமைப்படுத்தப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து மும்பை மாநகராட்சி நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பீகார் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Related Stories: