×

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி!: திருவாரூர் மத்திய பல்கலை.அறிவிப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக் கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் 22ம் தேதி அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் முழுவதுமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீலக்கொடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் அனைத்து ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி ரகுபதி அறிவித்திருந்தார். கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறாது என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் துறைவாரியாக தேர்வு என்பது ஆன்லைன் மூலமாக நடைபெறும்.

அந்த தேர்வுகள் குறிப்பிடும் தேதி அந்தந்த துறை அதிகாரிகள் நேரடியாகவே  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தெரிவிப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்களுக்கு தேர்வு உண்டு, இல்லை என மாறுபட்ட கருத்துக்கள் வந்திருந்த நிலையில், தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் என பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

Tags : Thiruvarur Central University , Department heads , final exams ,final year students ,Thiruvarur Central University,
× RELATED திருவாரூர் மத்திய பல்கலைக்கழக...