×

உயர்நிலையில் தங்கம்....சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,592-க்கு விற்பனை: துன்பத்தில் நகை பிரியர்கள்...!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 அதிகரித்து ரூ.5,199-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக தொழில்துறை தேக்கமடைந்து உலகப் பொருளாதாரச் சக்கரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தங்கம் விலை மட்டும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. அதிலும் கடந்த 7 நாட்களில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில் இதற்கான காரணம் என்ன, தங்கம் விலை குறையுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Jewelry lovers , Gold, shaving, sale
× RELATED தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்தது