ஜப்பான் நாகசாகியின் அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய சிறுவன் அணு ஆயுதம் இல்லா உலகிற்காக 75 ஆண்டுகளாக பிரச்சாரம்

நியூயார்க்: ஜப்பான் நாகசாகியின் அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஒருவர், அணு ஆயுதம் இல்லா உலகிற்காக 75 ஆண்டுகளாக போராடி வருகிறார். நாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து அணுகுண்டு ஆகஸ்ட் 9 அன்று அமெரிக்கா வீசியது.

நாகசாகி மீது போடப்பட்ட ஃபேட்மேன் அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தெரிந்தது. தீ ஜுவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்9 ஆம் தேதி நாகசாகியில் அணுகுண்டு தாக்குதல் நடந்த போது 13 வயதான தெருமி தனகா வீட்டின் கீழ் தளத்திற்கு சென்று பதுங்கி உயிர் தப்பினார். அணுகுண்டு வெடிப்பிலும் அதை தொடர்ந்த அணுகதிர் வீச்சிலும் உறவினர்கள், அண்டை வீட்டார்கள், நண்பர்கள் அனைவரையும் இழந்ததையும் தான் சந்தித்த பொருளாதார இன்னல்களையும் சர்வதேச மாநாடுகளில் நினைவுகூர்ந்து, அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். ஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தின் ஆதரவாளராக உள்ளார்.

Related Stories: