அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு..!!

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 200 பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி மற்றும் 4 தேதிகளில் உ.பி.,மாநிலத்தின் மதுரா, வாரணாசி, சித்ராகூட், பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் , நைமிசாரண்யம் ஆகிய பல்வேறு இடங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும். அகந்த் ராமாயணத்தின் நூல்களும் ஓதப்படும்.

ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாட பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெறும். நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜூலை 31 ல் ராமர் கோவில் விழாவிற்கு யமுனோத்ரி, யமுனை நதிகளில் இருந்து புனித நீர், இமயமலை பகுதியில் வளரும் பிரம்ம கமல் பூ, ஆகியவற்றை பூசாரிகள் விஷ்வா இந்து பரிஷத் அலுவலக பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். இது அயோத்திக்கு அனுப்பப்படுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கங்கோத்ரி மண் மற்றும் கங்கை நதியின் நீர் ஆகியவையும் ராமர் கோவில் பணிக்கு அனுப்பப்படும்.

இது மட்டுமின்றி பல்வேறு நாட்டின் பல்வேறு புனித தலங்கள், கோவில்களில் இருந்தும் தீர்த்தம், மண், ஆடைகள், மலர்கள் உள்ளிட்ட பொருட்கள் அயோத்திக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பல மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: