வருமானத்துக்கு அதிகமாக சொத்து?: முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு...!!!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வாழையடியைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறையின் திட்ட இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் எத்தனை பேருக்கு தாக்கியுள்ளது என்று தினசரி ஊடகங்களுக்கு பீலா ராஜேஷ் தான் தகவல் தெரிவித்து வந்தார். இவரது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மக்களை கவர்ந்தது. இருப்பினும், தமிழக சுகாதார துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பல கோடி மதிப்பீல் பண்ணை வீடு கட்டியுள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் பீலா ராஜேஷ் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், ரூ.27 லட்சம் வாடகை வருவாயாக குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கான சொத்து ஆதாரம் இல்லை என்றும் வாங்கிய 6 சொத்துகளை குறிப்பிட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் செந்தில் குமார் என்பவர் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்த தலைமைச் செயலாளருக்கும், மத்திய பணியாளர் நலத்துறை வலியுறுத்தியுள்ளது.

Related Stories: