×

ஆண்டிபட்டி அருகே தடுப்பணையில் கழிவுநீர் தேக்கம்: அரசு பணம் வீணானதாக புகார்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கிருந்து வரும் நீர்வரத்து ஓடை ஆண்டிபட்டி நகரில் மயான பாதை வழியாக பாப்பம்மாள்புரம், காமராஜர் நகர், குமராபுரம், வாரச்சந்தை, பஸ்நிலையம் பகுதி வரை செல்கிறது. இந்த ஓடையில் நீர்வரத்து இல்லாததால், வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் ரூ.5.50 லட்சத்தில் மேற்படி நீர்வரத்து ஓடையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணையில் தற்போது கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பணை பணியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : dam ,Andipatti ,Government , Andipatti, dam, sewerage, government money
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு