×

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க அனுமதி

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2-ம், 3-ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த செரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு - DCGI அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலிடத்தில் இருப்பது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்ஸா நிறுவனமாகும். இவை இரண்டும்சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு - covishield எனும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன.

தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்திப் பரிசோதிக்கும் 2 மற்றும் 3-வது கட்டம் பிரிட்டனில் நடந்து வருகிறது. பிரேசிலில் 3-வது கட்ட பரிசோதனையும், தென் ஆப்பிரிக்காவில் முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மனிதர்கள் மீது 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையை நடத்த செரம் நிறுவனம் டிசிஜிஐ அமைப்பிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேரிடம் 17 நகரங்களில் கோவிஷீல்டு மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. குறிப்பாக டெல்லி எய்ம்ஸ், புனே பிஜே மருத்துவக் கல்லூரி, பாட்னா ராஜேந்திரா நினைவு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம், ஜோத்பூர் எய்ம்ஸ், கோரக்பூர் நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினம் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூர் ஜேஎஸ்எஸ் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட உள்ளது.



Tags : University of Oxford ,Corona ,Oxford , Oxford, Corona, Covishield
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...