×

தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில் சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சென்னையில் ஒரு சவரன் ரூ.41,504க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.41,504க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு  வருகிறது. 41,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது தங்கம் விலை. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவால் சர்வதேச அரங்கில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மஞ்சள் உலோகம்  என்று அழைக்கப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.8 குறைந்து ரூ.5,188-க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.41,504க்கு  விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.50 காசுகளாக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, gold, silver, the price
× RELATED தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்தது