கொரோனா கோரத்தாண்டவம்.! 6.92 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!! பாதிப்பு 1.82 கோடியாக உயர்வு...65,753 கவலைக்கிடம்..!!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.92 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 692,694 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 18,231,535 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,443,844 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,753 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,804,702 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 38,161 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,187,228 பேர் குணமடைந்தனர்.  

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 158,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,813,647 அதிகரித்துள்ளது.

* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 94,130 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,733,677 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 850,870 ஆக அதிகரித்துள்ளது.

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 19,614 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 428,850 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,445 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335,602 ஆக அதிகரித்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,190 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309,437 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,201 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 304,695 ஆக உயர்ந்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,154 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 248,070 ஆக உயர்ந்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,226 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 211,462 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,265 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187,919 ஆக அதிகரித்துள்ளது.

* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,236 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111,455 ஆக அதிகரித்துள்ளது.

* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,911 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,098 ஆக அதிகரித்துள்ளது.

* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,825 ஆக அதிகரித்துள்ளது.

* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,689 ஆக அதிகரித்துள்ளது.

* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,999 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில்  பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு  வருகிறது.

Related Stories: