×

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. செப். 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் நவ. 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ பரவல் காரணமாக மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனோ பரவல் வீரியம் எடுக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. நான்கு மாதங்களுக்கு பிறகு கொரோனோவை கட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து போட்டியை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டியது.

ஐ.பி.எல். போட்டியை நடத்த உலகக் கோப்பை, ஆசிய கோப்பை தொடர்கள் தடையாக இருந்தன. அக்டோபரில் தொடங்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துவது தொடர்பான முடிவு எடுக்க ஐ.சி.சி காலம் தாழ்த்தி வந்தது. இதனை அடுத்து, பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துபாய், ஜார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் எனவும் ஐ.பி.எல் குழு தலைவர் பிரிஜீஷ் படேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறப்போகிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், அதனை நேரில் காணமுடியாது என்ற செய்தி வருத்தமளிப்பதாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

Tags : announcement ,cricket series ,IPL T20 , IPL, Cricket Series, September, Launch, Announcement
× RELATED ஐபிஎல் டி20 தொடர் கேப்டன்சியில்...