×

தள்ளிப் போகிறது 5வது சீசன் டிஎன்பிஎல்

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்துள்ளது.  ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும் டிஎன்பிஎல் போட்டி தொடங்குவது வாடிக்கை. கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி, யுஏஇ மைதானங்களில் நடக்க உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படுமா இல்லை ரத்து செய்யப்படுமா  என்பது குறித்து  எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இதுகுறித்து டிஎன்சிஏ கவுரவ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை  நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் கோவிட்-19 பிரச்சினை இருப்பதால் டிஎன்பிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியம் இல்லை.
5வது சீசனை இந்த ஆண்டு நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்வோம்.


Tags : DNPL ,TNPL , TNPL
× RELATED கொடைக்கானலில் களைகட்டும் ‘ஆப் சீசன்’ மனதைக் கவரும் செர்ரி பிளாசம்