சுவீஸ் சூப்பர் லீக் யங் பாய்ஸ் அணி ஹாட்ரிக் சாம்பியன்

ஜூரிச்: சுவிஸ் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பிஎஸ்சி யங் பாய்ஸ் கால்பந்து அணி தொடர்ந்து 3வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளது. மொத்தம் 10 கால்பந்து கிளப்கள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஆண்டு  ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 4 முறை லீக் ஆட்டங்களில் மோதின. கொரோனா பீதியால் பிப்ரவரி 23ம் தேதி நிறுத்தப்பட்ட போட்டிகள் ஜூன் 20ல் மீண்டும் தொடங்கின. நடப்பு சாம்பியன் யங் பாய்ஸ், முன்னாள் சாம்பியன்  செயின்ட் கேலன் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், எப்சி சீயோன் அணியுடன் நேற்று மோதிய யங் பாய்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றதுடன், தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளது. அந்த அணிக்கு 14வது முறையாக சூப்பர் லீக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: