×

சில்லி பாயிண்ட்

* இணையதளம் மூலம் ஒருங்கிணைந்து 10 வகையான உடற்பயிற்சிகள் செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புவோர், www trueandhealth.com என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வதுடன், என்ன மாதிரியான பயிற்சிகள், எப்படி செய்ய வேண்டும் என்பது உட்பட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
*  2012 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ரன் விளாசியது, விராத் கோஹ்லியின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும் என்று முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் புகழ்ந்துள்ளார்.
* இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகள் செப்டம்பர் 16ம் தேதி நிறைவடையும் நிலையில், ஐபிஎல் தொடரின் 13வது சீசன் யுஏஇ-ல் செப்.19ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒரு வார தனிமைப்படுத்தல் கட்டாயம் என்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு உறுதியாக உள்ளதால் வார்னர், ஸ்மித், ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், கம்மின்ஸ் போன்ற வீரர்கள் களமிறங்க தாமதமாகும் எனத் தெரிகிறது.
* ஐபிஎல் தொடரின் 13வது சீசனை யுஏஇ மைதானங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழு இன்று கூடுகிறது.
* ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் இன்னும் குறையாத நிலையில், செப். 12-20ல் நடைபெறுவதாக உள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளதாக போட்டி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
* ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்க உள்ள லங்கா பிரிமியர் லீக் தொடரில் (எல்பிஎல்) விளையாட, இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் உட்பட 70 வெளிநாட்டு வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* 6 வார இடைவெளிக்குப் பிறகு, இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் பெங்களூரு, இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
*  லெஜண்ட் ஆப் செஸ் தொடரின் முதல் கட்ட அரை இறுதியில் பீட்டர் ஸ்விட்லர், அனிஷ் கிரிக்கு எதிராக மேக்னஸ் கார்ல்சன், நெபோம்னியாக்ட்சி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
* அயர்லாந்துடன் 3வது ஒருநாள் போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து அணியில் இருந்து ஜான் டென்லி முதுகு வலி காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக லயம் லிவிங்ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார்.Tags : team ,Pakistan ,Asian Cup , Pakistan team ,2012 Asian Cup series
× RELATED சில்லி பாயின்ட்...