×

கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து 2 கோடி மோசடி: முதுநிலை கணக்காளர் கைவரிசை

திருவனந்தபுரம்:  திருவனந்தபுரத்தில் ஓய்வு பெற்ற கருவூல அதிகாரியின் பாஸ்வேர்டை பயன்படுத்தி மாவட்ட கலெக்டரின் வங்கி கணக்கில்  இருந்த அரசு பணம் ₹2 ேகாடிக்குமேல் மோசடி நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வஞ்சியூரில் சார் கருவூலம் உள்ளது. இந்த கருவூலத்தில் மாவட்ட கலெக்டரின் கணக்கில் இருந்து பணம் மோசடி நடந்துள்ளதாக நிதி துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மாவட்ட கலெக்டரின் கணக்கில் இருந்த அரசு பணத்தில் இருந்து 2 கோடிக்குமேல் மோசடி நடந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இங்கு பணிபுரியும் பிஜு லால் என்ற முதுநிலை கணக்காளர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த கரூவூல தலைமை அதிகாரியாக இருந்தவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். அதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே அவர் விடுப்பில் சென்றார். அவரது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி பிஜு லால் 2 ேகாடி ரூபாயை தனது சொந்த கணக்கிற்கு மாற்றியுள்ளது ெதரியவந்தது. இது குறித்து வஞ்சியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Collector ,Senior Accountant , Collector Bank Account, Fraud, Senior Accountant
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...