×

சென்னை நகரில் நாளை முழு ஊரடங்கையொட்டி 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு: மாநகர போக்குவரத்து காவல்துறை

சென்னை: சென்னை நகரில் நாளை முழு ஊரடங்கையொட்டி 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு  144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரதது காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90003130103 எனும் எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Municipal Traffic Police ,Chennai , Chennai, full curfew, checkpoints, Metropolitan Traffic Police
× RELATED சென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு...