×

நெல்லை பழவூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் மீது தாக்குதல்: டி.எஸ்.பி. உட்பட 8 காவலர்கள் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!

நெல்லை: நெல்லையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக டி.எஸ்.பி. உட்பட 8 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜரத்தினம் என்ற செம்மணி. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி ராஜரத்தினம் வீட்டிற்குள் புகுந்து வலுக்கட்டாயமாக பழவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர், ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உள்பட 9 பேர் அவரை ராதாபுரம் காவல்நிலையம் அழைத்து சென்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் நவம்பர் 5ம் தேதி ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படியில் காவல் நிலைய உத்தரவுப்படி மனு ரசீது கொடுக்கப்பட்டு இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேவேளையில் இந்த வழக்கு சம்பந்தமாக வருவாய்துறையினருடைய சேரமாதேவி துணை ஆட்சியரும் அந்த வழக்கை விசாரணை செய்து ஆய்வறிக்கையை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இது சம்பந்தமாக நெல்லை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் போராட்டமும் நடத்தினர். ஆனால் வழக்கறிஞர் தரப்பு வாதமோ, காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே. இது சம்பந்தமாக எல்லை குடிமை உரிமைகள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் 8 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யக்கோரி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுத்தி வந்தமையால், மதுரை கிளையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இதனை உடனடியாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி -யிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், தலைமை செயலகத்தில் வருவாய்த்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறி ராதாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்ய மறுத்து வந்தார். இதனையடுத்து நாளை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார், அப்போது வள்ளியூர் டி.எஸ்.பி.ஆக இருந்த குமார், பணகுடி இஸ்பெக்டர் ஸ்ரீபன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலைமிரட்டல், வீடு புகுந்து தாக்குதல் உள்ளிட்ட  11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : police station ,guards ,prosecutor ,Nellai Palavoor , Nellai, Palavoor Police Station, Attorney, CPCIT
× RELATED நாங்குநேரி காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி